இந்திய அரசின் நேசனல் பென்சன் திட்டதில் இணைய மற்றும் மேலும் விபரங்களுக்கு: +91 98941 71402
Showing posts with label குழம்பு வகை. Show all posts
Showing posts with label குழம்பு வகை. Show all posts

Friday, 30 January 2015

சிம்பிள் சாம்பார்





தேவை:

துவரம் பருப்பு வேகவைத்தது – அரை கப்
நறுக்கிய பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் – 1 கப்
வெங்காயம், தக்காளி – 1
புளி – சிறிது
சாம்பார் பவுடர் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள், வெந்தயம், கடுகு, பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – சிறிது

செய்முறை:

கடாயில்  எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், காய்கறிகள், மஞ்சள்தூள், சாம்பார் பவுடர், உப்பு சேர்த்து நன்கு வதக்கி பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகும்வரை கொதிக்க விடவும். 

இப்போது வேகவைத்த பருப்பு, நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து புளிக்கரைசலை ஊற்றி இறக்கி விடவும். வேறொரு வாணலியில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து சாம்பாரில் கொட்டி பரிமாறவும்.

வெந்தயக் கீரை குழம்பு





தேவை:

வெந்தயக் கீரை   - 1 கட்டு.
புளி                      - தேவைக்கு.
சாம்பார் பொடி  - 2 ஸ்பூன்.
வேக வைத்த துவரம் பருப்பு   - அரை கப்.
கடுகு, சீரகம், வெல்லத்தூள்    - 1 ஸ்பூன்.
உப்பு, எண்ணெய்            - தேவைக்கு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெந்தயக்கீரையை நன்கு வதக்கி புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, சாம்பார் பொடி, வெந்த துவரம் பருப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இறக்கும் போது 1 ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்.

பச்சைப் பயறு மசாலா





தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்
தனியாத்தூள் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணை - 1 ஸ்பூன்
கடுகு         - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சைப்பயறை   அரை மணி  நேரம்  ஊற விடவும். ஊறிய பின், நன்றாகக் கழுவி நீரை வடித்து விட்டு,    பயறுடன் அரை கப்  தண்ணீர்   சிறிது உப்பு சேர்த்து  குக்கரில் போட்டு  1 விசில் வந்ததும்  இறக்கவும்..

கடாயில் எண்ணை விட்டு,  கடுகு போட்டு தாளித்து  அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும். 

பின்னர் அதில் வேக வைத்த பயறை, வெந்த நீருடன் அப்படியே ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகுத்தூள்,  தேவயான  உப்பு சேர்த்துக் கிளறி விடவும். 

மூடி போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். இது மிகவும் சத்தான ரெசிபி .சமைத்து சாப்பிட்டு பாருங்கள்.

இஞ்சி குழம்பு






தேவையானவை:

துவரம் பருப்பு -2 ஸ்பூன் 
கடலை பருப்பு -2 ஸ்பூன்
சாம்பார் பொடி  -2 ஸ்பூன் 
பெரிய வெங்காயம்  - 3
புளி         - சிறிதளவு  
பூண்டு           - 20 பல்
இஞ்சி       - 25 கிராம் 
வறுத்து பொடித்த வெந்தயம்  - 1 ஸ்பூன் 
கடுகு           - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி  - சிறிதளவு 
பெருங்காயம்   - சிறிதளவு 
கறிவேப்பிலை –  சிறிதளவு 
நல்லெண்ணெய்   - 4  ஸ்பூன்
உப்பு     - தேவையான அளவு 
புளி     -  சிறிதளவு  

செய்முறை:

முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .  பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.

கடாயில்   நல்லெண்ணைய்  விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். 

அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.   1   டம்ளர் தண்ணீர்  விடவும்.

புளி  கரைத்த   தண்ணீர்  சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடிஎல்லாம் சேர்க்கவும் .

நன்கு கொதித்து கெட்டியாகி   எண்ணெய்  பிரிந்து  வரும்போது   இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.

புடலங்காய் பொரிச்ச குழம்பு





தேவையான பொருள்கள்


புடலங்காய்   - 200 கிராம், 
துவரம் பருப்பு - 1/2 கப், 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், 
உப்பு - தேவைக்கு. 
வறுத்து அரைக்க...
எண்ணெய் - 2 ஸ்பூன், 
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - 3, 
துருவிய தேங்காய் - 3 ஸ்பூன், 
மிளகு, சீரகம் - 1 ஸ்பூன், 
அரிசி - 1 டீஸ்பூன் 
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், 
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிது. 


செய்முறை

துவரம் பருப்பில்  மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் வேக வைத்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய், அரிசியுடன்  மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். 

வறுத்ததை   தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் புடலங்காய், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். கடாயில் வேக வைத்த பருப்பு, காய் கலவை, அரைத்த கலவை சேர்த்து கொதிக்க விடவும். 

கொதித்ததும் கடுகு, உ.பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.