இந்திய அரசின் நேசனல் பென்சன் திட்டதில் இணைய மற்றும் மேலும் விபரங்களுக்கு: +91 98941 71402

Saturday 31 January 2015

காடை பெப்பர் மசாலா




தேவையான பொருட்கள்:
காடை - 4
பெரிய வெங்காயம் - 2
தயிர் - அரை கப்
கொத்தமல்லி - 2 கொத்து
புதினா - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - ‍ 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் ‍ - 2டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - ‍ 1 டீஸ்பூன்
உப்பு - ‍ தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - ‍‍ 2டீஸ்பூன்
மல்லித் தூள் - ‍ 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
 
செய்முறை:

1.காடையை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். 


2.காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.


3.இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். 


4.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு  வதக்கி கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


பிறகு காடையை போட்டு 4 நிமிடம் பிரட்டிய பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிரட்டவும். 

3 நிமிடம் கழித்து மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு நன்கு கிளரவும்.

அதன் பின்னர் காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாக சேரும்படி 5 நிமிடம் நன்கு கிளறி விடவும்.


பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டை போட்டு மூடி காடையை15  நிமிடம் வேக விடவும். 

இடையில் மூடியை திறந்து பிரட்டி விடவும். 15 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.

மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
சுவையான காடை வறுவல் ரெடி.

காடை 65




தேவையான பொருள்கள்


காடை         -   4
மிளகாய் தூள்   - 3 ஸ்பூன்
மஞ்சள்தூள்     - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
கார்ன் பிளவர் மாவு  - 3 ஸ்பூன்
அரிசி மாவு         - 1 ஸ்பூன்
கலர்   பொடி       - சிறிதளவு
உப்பு               - தேவைக்கேற்ப
லெமன்             - 1
எண்ணெய்  பொரிக்க - தேவையான அளவு

செய்முறை:

காடையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதோடு மிளகாய் தூள்  ,மஞ்சள்தூள்  ,இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கார்ன் பிளவர் மாவு   ,அரிசி மாவு   ,கலர்   பொடி   ,உப்பு    ,லெமன்   சாறு  அனைத்தையும் சேர்த்து நன்கு கிளரி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.  கடாயில்  எண்ணெய்  ஊற்றி காய்தவுடன்   ஊற வைத்த காடையை  போட்டு 2 புறமும் திருப்பி விட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும். சுவையான காடை 65 ரெடி. 

சிக்கன் 65

தேவை:

சிக்கன்       - கால் கிலோ.
தயிர்        - அரை கப்.
முட்டை     - 1.  
மஞ்சள் தூள் -     1/2 ஸ்பூன்
 மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.
சோளமாவு, அரிசிமாவு  - 2 ஸ்பூன். 
இஞ்சி, பூண்டு விழுது    - 2 ஸ்பூன்.
வெங்காயம்            - 1 [தேவைப்பட்டால்}
கலர் பொடி            - சிறிதளவு
உப்பு, எண்ணெய்       - தேவைக்கு.

செய்முறை:

முட்டையை 1 டம்ளரில் ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும் அதோடு 

சிக்கன், மற்றும் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும். 

 இந்த சிக்கன் கலவையை  1 மணி நேரம் ஊற வைத்து விடவும். 

பிறகு எண்ணெயில் பொரிக்கவும். 

பிறகு இதன் மேல் வெங்காயத்தை தூவி பரிமாறவும்.

சிக்கன் ப்ரை






தேவை

சிக்கன்      - அரை கிலோ. 
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
மிளகாய்த் தூள்      - 2 ஸ்பூன்.
எலுமிச்சைச் சாறு    - 1 ஸ்பூன்.
மஞ்சள் தூள்        - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு    - தேவைக்கு.                                         

செய்முறை:

சிக்கன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள்  தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

தேங்காய்பால் சிக்கன் கிரேவி


தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்

வெங்காயம் நறுக்கியது - 1 கப்

தக்காளி நறுக்கியது - 1/2 கப்

பச்சை மிளகாய் - 2

பட்டை கிராம்பு -சிறிதளவு

பிரிஞ்சி இலை - 2

தேங்காய் பால் - அரை கப்

சிக்கன் மசாலா - 3 ஸ்பூன்

தனியா தூள் - 2 ஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை:


கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, பிரிஞ்சி இலை, தாளித்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய்,  உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

சிறிதளவு வதங்கியவுடன்  அதோடு  சிக்கன் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும்.

இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் சிக்கன் துண்டுகளை தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து   சேர்த்து வேக விடவும்.   சிக்கன் வெந்தவுடன் 

தேங்காய் பால் சேர்த்து  ஒரு கொதி வரும் வரை வேக விட்டு இறக்கவும்.  சுவையான சிக்கன் கிரேவி ரெடி.