இந்திய அரசின் நேசனல் பென்சன் திட்டதில் இணைய மற்றும் மேலும் விபரங்களுக்கு: +91 98941 71402

Saturday 31 January 2015

காடை பெப்பர் மசாலா




தேவையான பொருட்கள்:
காடை - 4
பெரிய வெங்காயம் - 2
தயிர் - அரை கப்
கொத்தமல்லி - 2 கொத்து
புதினா - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - ‍ 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் ‍ - 2டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - ‍ 1 டீஸ்பூன்
உப்பு - ‍ தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - ‍‍ 2டீஸ்பூன்
மல்லித் தூள் - ‍ 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
 
செய்முறை:

1.காடையை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். 


2.காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.


3.இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். 


4.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு  வதக்கி கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


பிறகு காடையை போட்டு 4 நிமிடம் பிரட்டிய பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பிரட்டவும். 

3 நிமிடம் கழித்து மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு நன்கு கிளரவும்.

அதன் பின்னர் காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாக சேரும்படி 5 நிமிடம் நன்கு கிளறி விடவும்.


பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டை போட்டு மூடி காடையை15  நிமிடம் வேக விடவும். 

இடையில் மூடியை திறந்து பிரட்டி விடவும். 15 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.

மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
சுவையான காடை வறுவல் ரெடி.

காடை 65




தேவையான பொருள்கள்


காடை         -   4
மிளகாய் தூள்   - 3 ஸ்பூன்
மஞ்சள்தூள்     - 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
கார்ன் பிளவர் மாவு  - 3 ஸ்பூன்
அரிசி மாவு         - 1 ஸ்பூன்
கலர்   பொடி       - சிறிதளவு
உப்பு               - தேவைக்கேற்ப
லெமன்             - 1
எண்ணெய்  பொரிக்க - தேவையான அளவு

செய்முறை:

காடையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதோடு மிளகாய் தூள்  ,மஞ்சள்தூள்  ,இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கார்ன் பிளவர் மாவு   ,அரிசி மாவு   ,கலர்   பொடி   ,உப்பு    ,லெமன்   சாறு  அனைத்தையும் சேர்த்து நன்கு கிளரி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.  கடாயில்  எண்ணெய்  ஊற்றி காய்தவுடன்   ஊற வைத்த காடையை  போட்டு 2 புறமும் திருப்பி விட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும். சுவையான காடை 65 ரெடி. 

சிக்கன் 65

தேவை:

சிக்கன்       - கால் கிலோ.
தயிர்        - அரை கப்.
முட்டை     - 1.  
மஞ்சள் தூள் -     1/2 ஸ்பூன்
 மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.
சோளமாவு, அரிசிமாவு  - 2 ஸ்பூன். 
இஞ்சி, பூண்டு விழுது    - 2 ஸ்பூன்.
வெங்காயம்            - 1 [தேவைப்பட்டால்}
கலர் பொடி            - சிறிதளவு
உப்பு, எண்ணெய்       - தேவைக்கு.

செய்முறை:

முட்டையை 1 டம்ளரில் ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும் அதோடு 

சிக்கன், மற்றும் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும். 

 இந்த சிக்கன் கலவையை  1 மணி நேரம் ஊற வைத்து விடவும். 

பிறகு எண்ணெயில் பொரிக்கவும். 

பிறகு இதன் மேல் வெங்காயத்தை தூவி பரிமாறவும்.

சிக்கன் ப்ரை






தேவை

சிக்கன்      - அரை கிலோ. 
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
மிளகாய்த் தூள்      - 2 ஸ்பூன்.
எலுமிச்சைச் சாறு    - 1 ஸ்பூன்.
மஞ்சள் தூள்        - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு    - தேவைக்கு.                                         

செய்முறை:

சிக்கன், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள்  தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

தேங்காய்பால் சிக்கன் கிரேவி


தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்

வெங்காயம் நறுக்கியது - 1 கப்

தக்காளி நறுக்கியது - 1/2 கப்

பச்சை மிளகாய் - 2

பட்டை கிராம்பு -சிறிதளவு

பிரிஞ்சி இலை - 2

தேங்காய் பால் - அரை கப்

சிக்கன் மசாலா - 3 ஸ்பூன்

தனியா தூள் - 2 ஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை:


கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, பிரிஞ்சி இலை, தாளித்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய்,  உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

சிறிதளவு வதங்கியவுடன்  அதோடு  சிக்கன் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும்.

இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் சிக்கன் துண்டுகளை தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து   சேர்த்து வேக விடவும்.   சிக்கன் வெந்தவுடன் 

தேங்காய் பால் சேர்த்து  ஒரு கொதி வரும் வரை வேக விட்டு இறக்கவும்.  சுவையான சிக்கன் கிரேவி ரெடி.

Friday 30 January 2015

செட்டிநாடு சிக்கன் குழம்பு





தேவையான பொருட்கள்
கோழிக்கறி          -1/2 கிலோ
பெரிய வெங்காயம்    -2
தக்காளி             -4
இஞ்சி              -   சிறுதுண்டு
பூண்டு              -15 பல்
கொத்தமல்லித் தழை     - சிறிதளவு
கறிவேப்பிலை             -   சிறிதளவு
துருவிய தேங்காய்        -   அரை கப்
எண்ணெய்                -   கால்  கப்
காய்ந்த மிளகாய்        - 8
கசகசா                     -   2 ஸ்பூன்
கொத்த மல்லி    - 2 ஸ்பூன்
சீரகம்           - அரை ஸ்பூன்
கிராம்பு        -    3
பட்டை         - சிறு துண்டு
சோம்பு             -  1 ஸ்பூன்
மிளகுத்தூள்               - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள்             - அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு      - 1 ஸ்பூன்
உப்பு               -     தேவையான அளவு

செய்முறை :

கோழியை நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் பொடியாக நறுக்க வேண்டும்.
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன்  எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், துருவிய தேங்காய், கசகசா, கிராம்பு, பட்டை, மல்லி விதை, சீரகம், சோம்பு, ஆகியவற்றைப் போட்டு வறுத்து ஆற வைத்து அதனுடன்  இஞ்சி, பூண்டு சேர்த்து  விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மீதியுள்ள எண்ணெயை காயில் ஊற்றி  சூடாக்கி, நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் கறிவேப்பிலை இலைகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவினையும் சேர்க்க வேண்டும்.
 நன்கு வதக்கிய பிறகு தக்காளி, மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிட வேண்டும்.
அதன் பிறகு கோழித் துண்டங்களைச் சேர்த்து சிறிது நேரம் வேகவிட வேண்டும்.
2 கப் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும்.
கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, மல்லித் தழை தூவிப் பரிமாற வேண்டும்.
சுவையான செட்டிநாட்டு சிக்கன் குழம்பு ரெடி.

சுவையான சிக்கன் சாப்ஸ்







தேவையான பொருட்கள்:

சிக்கன் –  அரை கிலோ

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 3

கறிவேப்பிலை - சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது –    2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

வறுத்துப் பொடிக்க:

சோம்பு    – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

மல்லி விதை – 1 ஸ்பூன்

மிளகு – 1/2 ஸ்பூன்

வரமிளகாய் – 5 – 6

வெந்தயம்    – 1/2 ஸ்பூன்

வதக்கி அரைக்க:

தேங்காய் – 3 ஸ்பூன்

சோம்பு – 1/2 ஸ்பூன்

தாளிக்க:

பட்டை    – 2 துண்டு

சோம்பு – 1/2 ஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அரை  ஸ்பூன்  எண்ணெயில் தேங்காயையும், சோம்பையும் லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கிக் கொள்ளவும். அதனுடன் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வதங்கவிடவும்.

சிக்கன் நன்கு வதங்கியதும் தேங்காய் விழுது, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிக்கன் நன்கு வெந்ததும், உப்பு சரிபார்த்து பொடித்த பொடி தூவி இறக்கவும்.

சிம்பிள் சாம்பார்





தேவை:

துவரம் பருப்பு வேகவைத்தது – அரை கப்
நறுக்கிய பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் – 1 கப்
வெங்காயம், தக்காளி – 1
புளி – சிறிது
சாம்பார் பவுடர் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள், வெந்தயம், கடுகு, பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – சிறிது

செய்முறை:

கடாயில்  எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், காய்கறிகள், மஞ்சள்தூள், சாம்பார் பவுடர், உப்பு சேர்த்து நன்கு வதக்கி பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகும்வரை கொதிக்க விடவும். 

இப்போது வேகவைத்த பருப்பு, நறுக்கிய தக்காளி சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து புளிக்கரைசலை ஊற்றி இறக்கி விடவும். வேறொரு வாணலியில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து சாம்பாரில் கொட்டி பரிமாறவும்.

வெந்தயக் கீரை குழம்பு





தேவை:

வெந்தயக் கீரை   - 1 கட்டு.
புளி                      - தேவைக்கு.
சாம்பார் பொடி  - 2 ஸ்பூன்.
வேக வைத்த துவரம் பருப்பு   - அரை கப்.
கடுகு, சீரகம், வெல்லத்தூள்    - 1 ஸ்பூன்.
உப்பு, எண்ணெய்            - தேவைக்கு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெந்தயக்கீரையை நன்கு வதக்கி புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, சாம்பார் பொடி, வெந்த துவரம் பருப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இறக்கும் போது 1 ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்.

பச்சைப் பயறு மசாலா





தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்
தனியாத்தூள் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
எண்ணை - 1 ஸ்பூன்
கடுகு         - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பச்சைப்பயறை   அரை மணி  நேரம்  ஊற விடவும். ஊறிய பின், நன்றாகக் கழுவி நீரை வடித்து விட்டு,    பயறுடன் அரை கப்  தண்ணீர்   சிறிது உப்பு சேர்த்து  குக்கரில் போட்டு  1 விசில் வந்ததும்  இறக்கவும்..

கடாயில் எண்ணை விட்டு,  கடுகு போட்டு தாளித்து  அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும். 

பின்னர் அதில் வேக வைத்த பயறை, வெந்த நீருடன் அப்படியே ஊற்றவும். அதில் மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகுத்தூள்,  தேவயான  உப்பு சேர்த்துக் கிளறி விடவும். 

மூடி போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். இது மிகவும் சத்தான ரெசிபி .சமைத்து சாப்பிட்டு பாருங்கள்.

இஞ்சி குழம்பு






தேவையானவை:

துவரம் பருப்பு -2 ஸ்பூன் 
கடலை பருப்பு -2 ஸ்பூன்
சாம்பார் பொடி  -2 ஸ்பூன் 
பெரிய வெங்காயம்  - 3
புளி         - சிறிதளவு  
பூண்டு           - 20 பல்
இஞ்சி       - 25 கிராம் 
வறுத்து பொடித்த வெந்தயம்  - 1 ஸ்பூன் 
கடுகு           - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி  - சிறிதளவு 
பெருங்காயம்   - சிறிதளவு 
கறிவேப்பிலை –  சிறிதளவு 
நல்லெண்ணெய்   - 4  ஸ்பூன்
உப்பு     - தேவையான அளவு 
புளி     -  சிறிதளவு  

செய்முறை:

முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .  பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.

கடாயில்   நல்லெண்ணைய்  விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். 

அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.   1   டம்ளர் தண்ணீர்  விடவும்.

புளி  கரைத்த   தண்ணீர்  சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடிஎல்லாம் சேர்க்கவும் .

நன்கு கொதித்து கெட்டியாகி   எண்ணெய்  பிரிந்து  வரும்போது   இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.

புடலங்காய் பொரிச்ச குழம்பு





தேவையான பொருள்கள்


புடலங்காய்   - 200 கிராம், 
துவரம் பருப்பு - 1/2 கப், 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன், 
உப்பு - தேவைக்கு. 
வறுத்து அரைக்க...
எண்ணெய் - 2 ஸ்பூன், 
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - 3, 
துருவிய தேங்காய் - 3 ஸ்பூன், 
மிளகு, சீரகம் - 1 ஸ்பூன், 
அரிசி - 1 டீஸ்பூன் 
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், 
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிது. 


செய்முறை

துவரம் பருப்பில்  மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் வேக வைத்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய், அரிசியுடன்  மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். 

வறுத்ததை   தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் புடலங்காய், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். கடாயில் வேக வைத்த பருப்பு, காய் கலவை, அரைத்த கலவை சேர்த்து கொதிக்க விடவும். 

கொதித்ததும் கடுகு, உ.பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும்.